Home » News » புற்றுநோயினால் பாதித்தவர்பளை மீட்டெடுக்க இனி ‘ஆற்றல்’ இருக்கு…

புற்றுநோயினால் பாதித்தவர்பளை மீட்டெடுக்க இனி ‘ஆற்றல்’ இருக்கு…

புற்றுநோயினால் பாதித்தவர்பளை மீட்டெடுக்க இனி ‘ஆற்றல்’ இருக்கு…

புற்றுநோயால் அவதிப்பட்டுவரும் ஏழை மக்களுக்கு உதவ சவீதா மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மெட்ராஸ் நைட்ஸ் ரவுன்ட் டேபிள் 181 ட்ரஸ்ட் இணைந்து மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயுடன் ஆரம்பிக்கக்கூடிய சாத்தியமுள்ள கருத்தடை புற்றுநோய் கொண்ட பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மருத்துவ நிதியுதவி வழங்கும் திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இதுவே ஆற்றல் அமைப்பாகும். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் புற்றுநோய் இல்லா சமுதாயத்தை உருவாக்குவதே.
மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயுடன் ஆரம்பிக்கக்கூடிய சாத்தியமுள்ள கருத்தடை புற்றுநோய் கொண்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்த ஆற்றல் அறக்கட்டளை கைகொடுக்கும். பூவிருந்தவல்லியில் உள்ள சவிதா மருத்துக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கே.கிருபாகரன் ஆற்றல் அறக்கட்டளையினை தொடங்கிவைத்தார். இதில் சென்னை அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சாந்தா, சவிதா பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்.எம். வீரப்பன் மற்றும் ஆற்றல் அறக்கட்டளையின் தலைவர் அஜ்மல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அடையாறு புற்றுநோய் மையத்தின் தலைவர் டாக்டர் சாந்தா நாட்டில் 40 சதவீத புற்றுநோய் புகையிலையால் வரக்கூடியதாக தெரிவித்தார். பள்ளி குழந்தைகளுக்கு பாடம் கற்றுத்தரக்கூடிய ஆசிரியர்கள் புகையிலை பழக்கம் உடையவராக இருந்தால் அவர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றார். மார்பகப் புற்றுநோயால் நகர்புற பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும், இதற்கு அவர்களின் பழக்கவழக்கமே காரணம் என்றார்.
முன்னதாக பேசிய அறக்கட்டளையின் தலைவர் அஜ்மல், புற்றுநோய் இல்லா சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் துவங்கப்பட்டு உள்ள இந்த ஆற்றல் அமைப்பில் மார்பக புற்றுநோய்,கருத்தடை புற்றுநோயுடன் கூடிய பெண்கள்,குழந்தைகளுக்கு மருத்துவ உதவி வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
இந்த ஆண்டில் 25 பேருக்கு இந்த உதவி வழங்கப்படும் என்றும், எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை படிபடியாக அதிகரிக்கும் என்றார்
மேலும், இந்த ஆற்றல் அறக்கட்டளையின் தூதுவர்களாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் தயாரிப்பாளாருமான பிராஷாந்த் மற்றம் முன்னணி நடிகையான சினேகாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Blue Captcha Image
Refresh

*