Home » Featured » எட்டு தோட்டாக்கள் திரைவிமர்சனம்

எட்டு தோட்டாக்கள் திரைவிமர்சனம்

எட்டு தோட்டாக்கள் திரைவிமர்சனம்

25 வயதே நிரம்பிய ஒரு இளம் இயக்குனரின் பலமான படைப்பு. துருவங்கள் பதினாறு , குற்றம் 23 , மாநகரம் போன்ற தரமான படங்களின் வரிசையில் இடம்பெறக்கூடிய படமாக அமைந்துள்ளது எட்டு தோட்டாக்கள். ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி தன்னுடைய துப்பாக்கியை தொலைத்து விட்டு அதனால் ஏற்படும் பிரச்சினைகளும் ,அந்த துப்பாக்கியில் உள்ள தோட்டாக்கள் எட்டும் பல்வேறு இடங்களில் வெடிக்கிறது.இதற்கு யார் காரணம் ? அந்த போலீஸ் அதிகாரியின் நிலைமை என்ன என்பது படத்தின் இறுதியில் தெரிய வருகிறது. படத்தின் ஹீரோ புதுமுகமாக இருந்தாலும் வில்லனாக வாழ்ந்திருக்கும் எம். எஸ் பாஸ்கர் அவர்களே படத்தின் ஹீரோவாக தெரிகிறார். 57 வயது முதியவரின் ஏமாற்றத்தையும் வலியையும் தன் எதார்த்த நடிப்பின் மூலம் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். நாசர் தன் அனுபத்தில் படத்தை தூக்கி நிறுத்துகிறார். படத்தின் கதாபாத்திரங்கள் அனைத்தும் நம் மனதில் ஆழமாக பதிகின்றார்கள். இசையும்,ஒளிப்பதிவும் படத்தின் கதையோடு பயணிக்கின்றன. தமிழ் சினிமாவின் தரத்தை தூக்கி பிடிக்க இன்னொரு இளம் இயக்குனர் வந்துவிட்டார் படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் அவர்கள். எட்டு தோட்டாக்கள் : அடையாளம்