Home » Reviews » Movie Reviews » ஓரு முகத்திரை : வெள்ளித்திரையில் பார்க்க வேண்டிய படம்

ஓரு முகத்திரை : வெள்ளித்திரையில் பார்க்க வேண்டிய படம்

ஓரு முகத்திரை : வெள்ளித்திரையில் பார்க்க வேண்டிய படம்

துருவங்கள் பதினாறு படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு வித்தியாசமான கதையை கேட்டு நடித்திருக்கிறார் ரஹ்மான் அவர்கள். மனோதத்துவ நிபுணரான ரஹ்மான் ஒரு இளம் பெண்ணின் மீது காதல் வயப்படுகிறார்.ஆனால் அந்த பெண்ணின் மீது கொண்ட காதல் ஒரு கட்டத்தில் காமமாக மாற இதை புரிந்து கொண்ட அந்த பெண் இவரை எப்படி சமாளிக்கிறார் என்பது தான் மீதி கதை.எப்பொழுதும் தன் வித்தியாசமான நடிப்பால் அசத்தும் ரஹ்மான் இந்த படத்திலும் தனது நடிப்பால் அசத்தியிருக்கிறார்.தனது பங்குக்கு அந்த ஹீரோயின் அவருக்கு ஈடு கொடுத்து வெளுத்து வாங்குகிறார். படத்தின் மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பாக செய்துருக்கிறார்கள். படத்தின் பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு சுவாரசியம் கூட்டுகின்றன. படத்தின் இயக்குனர் தனது முத்திரையை இறுதிக்காட்சியில் அருமையாக பதிவு செய்கிறார். ஓரு முகத்திரை : வெள்ளித்திரையில் பார்க்க வேண்டிய ஒன்று