Home » Featured » கதாநாயகன் திரைவிமர்சனம்

கதாநாயகன் திரைவிமர்சனம்

கதாநாயகன் திரைவிமர்சனம்

குடும்பத்தோடு பார்க்க கூடிய ஒரு பொழுதுபோக்கு படம் தான் இந்த கதாநாயகன். விஷ்ணு நடிப்பில், பல படங்களில் கவுரவ தோற்றத்தில் நடித்த முருகானந்தம் தான் இந்த படத்தின் இயக்குனர். “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தின் ரிப்பீட் மாதிரி இருந்தாலும் கதை வேறதாங்க. சமுதாய சீர்கேடுகளை கண்டு கொந்தளிக்காம பயந்தாங்கொளியா வரும் ந‌ம்ம விஷ்ணு, காதலிக்கிற பொண்ணு கிடைக்கல என்றதும் வீறு கொண்டு எழுந்து “கதாநாயகனா” மாறுகிறார் இதாங்க லைன், இதுல நம்ம சூரி, சரண்யா மேடம், ஆனந்த்ராஜ் மற்றும் பலர் இருக்காங்க.
முக்கியமா நம்ம விஜய் சேதுபதி இரண்டு காட்சிகளில் நடிச்சிருக்காரு. இரண்டு மணிநேர படமா இருந்தாலும், இரண்டு நிமிட காட்சியானாலும், தியேட்டர் மொத்தமும் அதிருதுங்க. அதே நக்கல், நையாண்டி, எகத்தாளம், சூப்பர் ஜி ! சூப்பர் ஜி ! முந்தின படத்துல ரோபோ சங்கர் மாதிரி, இந்த படத்துல ஆனந்த்ராஜ். பின்னியிருக்காரு மனுசன், அருமையான நகைச்சுவையான காட்சிகள். சூரி வளரும் நடிகர், உடல் மொழியெல்லாம் ஒரே மாதிரி பண்ணாதிங்க, சில இடங்களில் ரசித்தாலும், பல இடங்களில் முகம் சுளிக்க வைக்கிறார். இந்த படத்தின் பலவீனத்தில் இவருக்கு தான் முதல் இடம்.
காமெடி படம் என்பதால் வில்லன்களை கூட காமெடியாகவே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அருள்தாஸ் மற்றும் பிச்சைக்காரன் வில்லனின் நடிப்பும் நேர்த்தி. அவங்க காமெடி பண்ண போகிறார்கள் எனபது காட்சிக்கு முன்பே ரசிகனுக்கு தெரிந்து விடுவதால் சுவாரஸ்யம் குறைந்துவிடுகிறது. இதுவும் படத்தின் பலவீனம். தேவையில்லாத கதாநாயகி கேத்ரின் தெரஸா. (இந்த மாதிரி குடும்ப படத்துல எல்லாம் படம் முழுக்க லோ நெக் ட்ரெஸ்ல வராதிங்கம்மா!) என்ன பன்றது படத்தின் பெயர் கதாநாயகன் என்பதால் தேவைப்படுகிறது நம்ம தமிழ்சினிமாவுக்கு.
எல்லா பாடல்களும் கேட்கிறமாதிரியும், ரசிக்கிறமாதிரியும் இருப்பதால் இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுக்கு பாராட்டுக்கள். ஆனால் பாடலே பொருந்தாத திரைக்கதை எழுதுன இயக்குனருக்கு தான் நறுக்குனு ஒரு குட்டு ! விஷ்ணு, சொந்த படத்தில் ஹீரோ. கைவசம் பல படங்கள் இருக்கு. தயாரிப்பாளாரா விஜய் சேதுபதியை அட்டாச் பண்ண மார்கெட்டிங் சூப்பர். ஆனால் கதாநாயகனா கதையை சரியா தேர்வு செய்யாம விட்டுட்டீங்க. க‌தம்பமா திரைக்கதை எழுதி ஒருவழியா படத்தை தேற்றி விட்டாலும், கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் விஷ்ணுவுக்கு இதுவும் ஒரு ஹிட் படமா இருந்திருக்குமே இயக்குனர் சார்.
கடைசியா, ஒரு சின்ன பொண்ணு சொல்றா, “படம் செம ஜாலியா, காமெடியா இருந்துச்சில்ல டாடி”னு, அதுக்கு அவங்க அப்பா சொல்றாரு, “கதை தான்டா இல்ல செல்லம் உனக்கு மறுபடியும் சொல்ல”என்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Blue Captcha Image
Refresh

*