Home » Featured » சரவணன் இருக்க பயமேன் திரைவிமர்சனம்

சரவணன் இருக்க பயமேன் திரைவிமர்சனம்

சரவணன் இருக்க பயமேன் திரைவிமர்சனம்

உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் காமெடி இயக்குனர் எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்திருக்கும் காமெடி திருவிழா சரவணன் இருக்க பயமென். டைரக்டர் எழில் அவர்களின் படங்களில் பெரும்பாலும் கதைகள் இருக்காது அதுபோல தான் இந்த படமும் படத்தில் காமெடி தவிர வேறு எதுவும் இல்லை. தனது சிறுவயது காதலி ரெஜினாவை கரம்பிடிக்க போராடும் உதயநிதியும் அதற்கு உதவும் அவரின் இறந்து போன முன்னாள் காதலி ஸ்ருஷ்டி டாங்கே நடிப்பும் அற்புதம். படம் முழுக்க ஏகப்பட்ட காமெடி நட்சத்திரங்கள் புகுந்து விளையாடுகிறார்கள். முதன்மை காமெடியனாக சூரி வருகிறார் அவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் அனைத்து காமெடி நடிகர்களும் அசத்தி இருக்கிறார்கள்.படத்தில் வரும் எம்புட்டு இருக்குது ஆசை பாடல் இமானின் பெயரை நிலைநிறுத்துகிறது. படத்தின் பின்னணி இசையில் சிறிது தொய்வு.இந்த கோடை விடுமுறை நாட்களில் கண்டு கழிக்க வேண்டிய காமெடி திரைப்படம் சரவணன் இருக்க பயமென். சரவணன் இருக்க பயமேன் : காமெடி திருவிழா