Home » Featured » ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ திரைவிமர்சனம்

‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ திரைவிமர்சனம்

‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் பல காதல் படங்கள் வந்துள்ளது அதில் இருந்து வித்தியாசமாகவும் காமெடியாகவும் உள்ளது இந்த படம். அதர்வாவின் தந்தை டீ.சிவா தான் ஒரு ஜெமினிகணேசன் ரசிகர் என்பதால் தந்து மகன் அதர்வவிற்கு ஜெமினிகணேசன்  என பெயர் வைக்கிறார். பெயருக்கு ஏற்றார் போல் காதல் மன்னனாக வளர்கிறார் அதர்வா. ரெஜினா காசென்ரா, அதிதி போஹாங்கார், பிரணிதா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் என்று நான்கு பேரை காதலிக்கிறார்.இவர்களில் யாரை திருமணம் செய்தார் அதர்வா என்பதை சூரியின் நகைச்சுவையோடு கலகலப்பாக சொல்லியிருக்கும் படம் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்.
ஜெமினிகணேசனாக அதர்வாவும் சுரிளிராஜனாக சூரியும் நல்ல தேர்வு. இருவரும் இணைந்து படம் முழுக்க காமெடி திருவிழா நடத்தியிருக்கிறார்கள். படத்தின் நான்கு ஹீரோனிகளும் அழகாகவும் சம அளவில் நடிக்கவும் செய்திருக்கிறார்கள். இமானின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். படத்தின் ஒளிப்பதிவு கலர்புல்லாக உள்ளது. படத்தின் முதல் 15 நிமிடங்கள் மெதுவாக சென்றாலும் படத்தின் பிளாஷ்பக் ஸீன் வந்தவுடன் கலகலபாகிறது. இயக்குனர் ஓடம் இளவரசு தனது முதல் படம் என்றாலும் தேர்ந்த காமெடி இயக்குனர் போல் அனைவரிடமும் வேலை வாங்கி சிறப்பாக படத்தை கொடுத்திருக்கின்றார். மொத்தத்தில் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் : நல்ல கூட்டணி