Home » Featured » ‘திரி’ திரைவிமர்சனம்

‘திரி’ திரைவிமர்சனம்

‘திரி’ திரைவிமர்சனம்

இன்றைய நிலையில் கல்வி என்பது அரசியல்வாதிகள் கையில் இருக்கும் ஒரு தொழிலாக மாறிவிட்டது என்பதை கொளுத்தி போடும் திரியாக இருக்கிறது இந்த திரி. படத்தின் நாயகன் அஸ்வின் ஒரு மெக்கானிக்கல் பொறியாளர்.ஒரு நிகழ்வில் அரசியல்வாதியின் மகனின் மீது கை வைத்து விடுகிறார். இதனால் ஆத்திரம் அடையும் அவர் பொறுத்திருந்து அஸ்வின் பழிவாங்க அவரின் படிப்பு சான்றிதழில் இவர் ஒழுக்கமாற்றவர் என சான்றிதழ் கொடுத்து விடுகிறார். தனது தந்தை ஒழுக்கத்தை தீவிரமாக கடைபிடிக்க கூடியவர் என்பதை புரிந்த அஸ்வின் அவருக்கு தெரியாமல் இந்த பிரச்சனையை முடிக்க பார்க்கிறார். அவரின் பிரச்சனை முடிந்ததா இல்லை என்பதை சமூகத்திற்கு தேவையான கருத்துடன் சொல்லியிருக்கின்றனர்.
படத்தின் நாயகன் அஸ்வின் மற்றும் நாயகி ஸ்வாதி கச்சிதமான தேர்வு. அஸ்வினின் தந்தையாக வரும் ஜெயபிரகாஷ் பல இடங்களில் தன் நடிப்பு திறமையை நிரூபிக்கிறார். கருணாகரன் சில இடங்களில் சிரிப்பை வரவைக்கிறார். படத்தில் பாடல்களும் பின்னணி இசையும் ஓகே ரகம்.இயக்குனருக்கு முதல் படம் என்பதால் சில குறைகள் இருந்தாலும் அதை படத்தின் நிறைகள் மறைத்து விடுகிறது.மற்றபடி படம் ரசிக்கும் படியாகவே உள்ளது.
திரி : பொறி