Home » Featured » “துருவங்கள் பதினாறு” திரைவிமர்சனம்

“துருவங்கள் பதினாறு” திரைவிமர்சனம்

“துருவங்கள் பதினாறு” திரைவிமர்சனம்

dhuruvangal-16கோவை மாநகரில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் ரகுமானின் காவல்துறை கட்டுப்பாட்டிற்க்கு உட்பட்ட ஒரு பகுதியில் இரவில் ஒருவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்து கிடப்பதாக ஒருவர் புகார் தெரிவிக்கிறார் இந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும் போதே, அப்பார்ட்மெண்டில் வசிக்கும் ஒரு இளம் பெண் மிஸ்சிங் என்று ரகுமானுக்கு அழைப்பு வருகிறது. இந்நிலையில், அதே இரவில் மூன்று நண்பர்கள் காரில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு நபரை தெரியாமல் காரால் அடித்து விடுகிறார்கள். அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்து விடுகிறார். அந்த பிணத்தை அங்கேயே விட்டுவிட்டால் மாட்டி விடுவோம் என்று அந்த பிணத்தை தங்களது காரில் ஏற்றிக் கொண்டு சென்று விடுகின்றனர் அந்த மூவரும். மறுநாள் பார்க்கையில் அவர்கள் காரில் ஏற்றிக் கொண்டு வந்த பிணத்தை காணவில்லை. இந்நிலையில் துப்பாக்கியால் சுட்டு இறந்து கிடந்தவர் யார்..?? அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டாரா, இல்லை வேறு யாராவது கொலை செய்தார்களா..?? அப்பார்ட்மெண்டில் வசித்த அந்த பெண் எங்கே..??? காரில் ஏற்றிச் சென்ற அந்த பிணம் யார்..?? யார் அந்த பிணத்தை எடுத்துச் சென்றார்கள்..?? என்பன போன்ற பல கேள்விகளுக்கு விடையாக அடுத்தடுத்து சுவாரஸ்யமான காட்சி கோர்வைகளுடனும், ஒளிப்பதிவுடனும், இசையுடனும் படத்தின் இறுதியில் விடையளித்து நம்மை வியப்பில் ஆழ்த்தியிருக்கும் படம்தான் “துருவங்கள் பதினாறு”
தீபக் கதாபாத்திரத்தில் தோன்றும் ரகுமானின் மிகக் சிறந்த நடிப்பிற்க்கு உதாரணம் இந்த துருவங்கள் பதினாறு. ஒவ்வொரு கதாப்பாத்திரங்களின் பங்களிப்பு படத்தின் வெற்றிக்கு உறுதுனையாக இருந்து படத்தை நகர்த்திச்செல்கின்றது.
21 வயது இளைஞனின் மாஸ்டர் மைண்ட் படம் தான் “துருவங்கள் பதினாறு”. 2016 ஆண்டின் மிகச்சிறந்த படங்களின் வரிசையில் துருவங்கள் பதினாறு இடம்பெறும் என்பதில் ஐயமில்லை.