Home » Reviews » Movie Reviews » நகர்வலம் : ஊர்வலம்

நகர்வலம் : ஊர்வலம்

நகர்வலம் : ஊர்வலம்

காதல் சொல்ல வந்தேன் திரைப்படத்திற்கு பிறகு பாலாஜி கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம். தண்ணீர் லாரி டிரைவர் ஆக வேலை செய்யும் பாலாஜிக்கும் அந்த ஏரியாவில் வசிக்கும் ஹீரோயின் இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. காதல் வளர வளர காதலுக்கான பகையும் வளர்கிறது.தனது காதல் வீட்டில் தந்தைக்கு தெரிய வர அவர் தனது தம்பி அரசியல்வாதியிடம் இது பற்றி கூறி உதவி கேட்கிறார்.புத்தாண்டு இரவில் இருவரும் இணைந்து வாழ ஆசைப்பட்டு வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள்.அப்பொழுது என்ன நடந்தது ? அவர்கள் இணைந்தார்களா இல்லையா? என்பது கிளைமாக்ஸ்.
படத்தின் கதை மிகவும் பழைய காதல் கதை என்றாலும் அதை புதியதாக சொல்ல முயற்திகிருக்கிறார் இயக்குனர் மார்க்ஸ்.படத்தில் பலசரவணனும் யோகிபாபு செய்யும் காமெடி ரசிக்க வைக்கிறது.படத்தின் முதல் பாதி கலகலப்பாகவும் இரண்டாம் பகுதி சென்டிமெண்டாகவும் நகர்கிறது.படத்தின் இறுதி காட்சி திருப்பம் கண்கலங்க வைக்கிறது.
நகர்வலம் : ஊர்வலம்