Home » Featured » ‘பண்டிகை’ திரைவிமர்சனம்

‘பண்டிகை’ திரைவிமர்சனம்

‘பண்டிகை’ திரைவிமர்சனம்

பண்டிகை என்றவுடன் தீபாவளி அல்லது பொங்கல் பண்டிகை என்று எண்ண வேண்டாம். கண்ணுக்கு தெரியாமல் நடந்து கொண்டிருக்கும் தொழில்முறை வீதி சண்டையை தான் பண்டிகை என்று சொல்லியிருக்கிறார்கள். கிருஷ்ணா தனது சிறுவயதில் இருந்தே கடும் கோபகாரர் வளர்ந்தவுடன் தனது கோபத்தை கட்டுப்படுத்தி ஆனந்தியை காதலிகிக்கிறார். சரவணனின் நட்பால் தனது பண தேவைக்காக உயிரை பறிக்கும் வீதிசண்டையில் ஈடுபடுகிறார். ஒரு கட்டத்தில் கிருஷ்ணாவும் சரவணனும் பெரிய தொகைக்கு ஆசைப்பட்டு தங்களிடம் இருக்கும் பணம் முழுவதையும் தாதா எனப்படும் பெரிய ஆளிடம் ஏமாந்துவிடுகிறார்கள். பின்பு அந்த பணத்தை மீட்டுடுக்க திருட முயற்சி செய்கிறார்கள். அவர்களின் முயற்சியின் முடிவு என்ன ஆனது என்பது மீதி கதை.
கிருஷ்ணாவுக்கு தனது சினிமா பயணத்தில் இது மிக சிறந்த படமாக அமைந்துள்ளது. சரவணன் தனது யதார்த்த நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். ஆனந்தி, கிருஷ்ணா காதல் காட்சிகள் ரசனை. மற்றபடி படத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு உயிர் கொடுத்துள்ளது. படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாகவும் இரண்டாம் பாதி வேகமாகவும் அமைத்திருக்கிறார் இயக்குனர்.தொழில்முறை வீதிசண்டையை பற்றி தெரியாத பல உண்மைகளை சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
பண்டிகை : கொண்டாடலாம்.