Home » Reviews » Movie Reviews » மேயாத மான் : சிரிப்பு சரவெடி

மேயாத மான் : சிரிப்பு சரவெடி

மேயாத மான் : சிரிப்பு சரவெடி

தனக்கென்று தனி முத்திரை பதித்து வைத்துள்ள இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவரது ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கும் படம்மேயாத மான். இந்த படம் ஏற்கனவே குறும்படம் ஆக வந்து வெற்றி பெற்றுள்ளது. நாயகன் வைபவ் இதயம் முரளி போல் தனது காதலை சொல்ல முடியாமல் கோழையாக தற்கொலை முடிவை எடுக்கிறார். அவரை தற்கொலையில் இருந்து காப்பாற்ற அவரது நண்பர்கள் அவரது காதலியிடம் கெஞ்சி நாயகனை வெறுகும்படி பேச சொல்கின்றனர். இதனால் தான் காதலித்த பெண் நல்லவள் இல்லை என்று தனது தற்கொலை முடிவை கைவிட்டு தனது வாழ்க்கையை வாழ்கிறார். ஒரு கட்டத்தில் அவரது காதலி நல்லவள் தான் என்று அவருக்கு தெரிய வருகிறது அதற்கு பின் என்ன நடக்கிறது என்பது கதை.
நாயகன் வைபவ், நாயகி பிரியா பவானி ஷங்கர் மற்றும் வைபவ் தங்கச்சியாக வரும் இந்துஜா மற்றும் வைபவ் உயிர் நண்பனாக வரும் விவேக் பிரசன்னா இவர்கள் நான்கு பேர் தான் படத்தின் முக்கிய பங்கு உள்ளது. நான்கு பேரும் அசத்தி உள்ளனர் நடிப்பில். படத்தின் அடுத்த முக்கிய அம்சம் இசை பாடல்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. படத்தின் பலம் இசையென்று சொல்லலாம். ஒளிப்பதிவும் மெச்சும்படி உள்ளது. இயக்குனர் ரத்தினக்குமார் ஒரு நல்ல காமெடி கலந்த காதல் படத்தை ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார்.
மேயாத மான் : சிரிப்பு சரவெடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Blue Captcha Image
Refresh

*