Home » Reviews » Movie Reviews » “மோ” திரைவிமர்சனம்

“மோ” திரைவிமர்சனம்

“மோ” திரைவிமர்சனம்

mo-first-lookமுன்னாள் எம்எல்ஏ செந்தில்நாதனுக்கும், ரியல் எஸ்டேட் அதிபர் வெற்றிவேலுக்கும் தொழில் போட்டி. செந்தில்நாதன் எந்த சொத்தையும் வாங்குவதற்கு முன்பு அங்கு காத்து, கறுப்பு, பேய், பிசாசு இருக்கிறதா என்று மந்திரவாதியை வைத்துப் பார்த்துவிட்டுத்தான் வாங்குவார். பாழடைந்து கிடக்கும் பள்ளிக்கூடம் ஒன்று விலைக்கு வருகிறது. அதையும் வாங்க விரும்புகிறார் செந்தில்நாதன். அங்கு பேய் இருப்பதாக அவரை நம்பவைக்க வேண்டும் என்று வெற்றிவேல் திட்டமிடுகிறார். அந்தப் பொறுப்பை 5 பேர் கொண்ட குழுவிடம் ஒப்படைக்கிறார்.
பேய் ஓட்டுதல் உள்ளிட்ட பல பித்தலாட்ட வேலைகளுக்குப் பேர் போன அவர்கள் பேய் நாடகத்தை அரங்கேற்ற அந்தப் பள்ளிக்கூடத்துக்குச் செல்லும்போது எதிர்பாராத நெருக்கடியில் சிக்கிக்கொள்கிறார்கள். அந்த நெருக்கடியும் அதன் விளைவுகளும் தான் ‘மோ’ படத்தின் மீதிக்கதை.
எந்த கதையாக இருந்தாலும் அதில் தன்னை கச்சிதமாக பொருத்திக் கொள்வார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதேபோல் தான், இந்த படத்திலும் மிகவும் ஜாலியான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.
தியேட்டரில் அதிக கைத் தட்டல்கள் முனீஸ் காந்துக்கும், யோகிபாபுவுக்குமே கிடைக்கிறது பேய் பங்களாவில் முனீஸ்காந்த் செய்யும் சேட்டை களும், பேசும் விதமும் படத்தின் கலகலப்புக்கு உத்தரவாதம் அளிக்கின்றன. தன்னுடைய உலக சினிமா ‘அறிவை’ யோகி பாபு வெளிப்படுத்தும் விதம் அட்டகாசம்.
அற்புதமான திரைக்கதை மற்றும் காட்சிகள் மூலம் அற்புதமான நகைச்சுவை விருந்தை அளித்திருக்கின்றார் இயக்குனர் புவன்.