Fully Entertainment

Pachai Vilakku – திரைப்படம் விமர்சனம்

பச்சை விளக்கு – டாக்டர் தற்போது இயக்குனர் ஆகியுள்ள மாறன் அவர்களின் படைப்பு இந்த பச்சை விளக்கு. படத்தின் கதை சாலை விதிகளை மதிக்காமல் செல்வதால் ஏற்படும் விபரீதங்களை மற்றும் காதல் என்ற பெயரால் ஏமாறும் இளம் வயதினரை பற்றியும் அலசுகிறது படம். படத்தின் முக்கிய மற்றும் நாயகனாக படத்தின் இயக்குனர் மாறனே நடித்துள்ளார். படத்தின் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

நாயகன் மாறன் மற்றும் மனோபாலா,இமான் அண்ணாச்சி,நாயகி தீஷா மற்றும் பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். வேதம் புதிது படத்தின் இசையமைப்பாளர் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.படத்தின் கதையை நன்றாக தேர்வு செய்த இயக்குனர் திரைக்கதையில் இன்னும் சுவாரசியமாக கொண்டு சென்றிருக்கலாம். படத்தில் காமெடி நாஞ்சில் விஜயன் வருகிறார் ஆனால் சிரிப்பு தான் வரவில்லை.